புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்டோசர்கள் கொண்டு மக்கள் வசிக்கும் வீடுகளை இடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையிலும் உ.பி. அரசின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் வீடுகள் மேம்பாட்டு வாரியத்தால் இடுத்துத் தள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் வாரியம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.