விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்

241

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கைது செய்து மத்திய அரசு முழுமையாக விசாரிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரவிருக்கும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்காகவே இந்த சோதனை நடவடிக்கைகள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலை ஒட்டியும்  அமலாக்கத்துறை சோதனை தொடர்வதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற சோதனைகள் நடைபெற்றாலும், எந்த ஆவணத்தையும் பறிமுதல் செய்ய முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில மாதங்களுக்கு முன் தாம் அறிவித்தபடி, சத்யேந்திர ஜெயின் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் அவர் நினைவூட்டினர்.

இதேபோல, துணை முதல்வர் மனீஷ் சிஷோடியாவும் விரைவில் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.