Monday, March 31, 2025

முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிக்கையை டில்லி போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது டில்லியின் துவாரகா பகுதியில், அரசு நிதியை தவறாக பயன்படுத்தி, ஆம் ஆத்மிக்கு விளம்பரம் ஏற்படுத்தும் நோக்கில், பெரிய அளவில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது பொது சொத்துரிமைச் சட்டத்தை மீறியதாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப்.,18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Latest news