தலைநகர் டெல்லியில் கடுமையான பனி நிலவி வருவதால் டெல்லி NCR பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த வெப்பநிலை மேலும் குறைந்து கடுமையான பனி நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.