டெல்லியில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக போட்டியிடுகின்றன. இந்நிலையில் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது.
பாஜக வெளியிட்டுள்ள வாக்குறுதி : டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதத்திற்கு ரூ. 2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும். எல்பிஜியைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம் கிடைக்கும். 5 ரூபாய்க்கு சத்தான உணவை வழங்க கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது .
60 முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ. 2,500 ஓய்வூதியம் , 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஆகியவை பாஜக அளித்த வாக்குறுதிகளில் அடங்கும்.