இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
கடந்த 2023-ல் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கேட்ட நீதிமன்றம், இன்று (மே 26) போக்சோ வழக்கை முடித்து வைத்தது.