70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தொகுதிக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு டெல்லிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி முழுவதும் 30 ஆயிரம் போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 6.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படவுள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீதம் வாக்குப்பதிவு