கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் நடிகை ரம்யாவை இன்ஸ்டாகிராமில் சிலர் தகாத வார்த்தையிலும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசில் ரம்யா புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் ஆபாச கருத்து வெளியிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகை ரம்யா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரில் ஒருவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்றும், மற்றொருவர் நடிகர் தன்வீரின் ரசிகர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.