Saturday, March 15, 2025

கும்பமேளா குறித்து அவதூறு : சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது வழக்கு பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்று புனித நீராடி இருப்பதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்திருந்தது.

சமீபத்தில் கும்பமேளாவில் புனித நீராடிய பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைளதளங்களில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news