சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து தீபிந்தர் கோயல் விலகியுள்ளார்.
பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் சிங் திண்ட்ஸா, எடர்னல் குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபிந்தர் கோயல், தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குநராக தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், “எடர்னல் எப்போதும் எனது வாழ்நாள் பணியாகவே இருக்கும். இந்த நிர்வாக மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அல்பிந்தர் திண்ட்ஸா, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் எடர்னல் குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளார்.
