நாடாளுமன்ற மக்களவைத்தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு சம்பந்தமாக பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதனை முற்றிலுமாக எதிர்த்து, பாஜக தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக செய்தி தொடர்பாளர் மற்றும் கேரளா மாநில அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஆர்.எஸ்.எஸ்) முன்னாள் மாநில தலைவர் பிரிந்து மகாதேவ் மலையாள டி.வி. ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு, “ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த போதிலும், பாஜக மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீகுமார் சிசி அளித்த புகாரின் அடிப்படையில், பெரமங்கலம் போலீசார் அந்த பாஜக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.