சாம்பாரில் இறந்து கிடந்த பல்லி.., கேன்டீனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் கேண்டினில் வாங்கிய இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கேன்டீனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுககுடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் சௌசல்யா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஜெயராமன் இட்லி வாங்கி கொடுத்துள்ளார்.

கௌசல்யா இட்லி சாப்பிட சாம்பார் ஊற்றியபோது, அதில் சிறிய பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயராமன் கேண்டின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கேன்டீனுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related News

Latest News