சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ (DD Next Level). பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்ரீநிவாச கோவிந்தா’ பாடல், திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை அவமதிக்கும் விதமாக உள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.