சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ (DD Next Level). பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்ரீநிவாச கோவிந்தா’ சர்ச்சையில் சிக்கிய நிலையில் அந்த பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இப்படம் நேற்று வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இந்திய அளவில் ரூ.2.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.