ஒரு தந்தையின் கடைசி கடிதம்,நெட்டிசன்களை நெகிழ வைத்த வைரல் பிக்

249
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ஏமி, தனது தந்தை இறந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்துள்ளார்.

தேனீ வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவரின் தந்தை ரிக், அந்த கடிதத்தை தேனீ வளர்ப்புக்கு தொடர்பான பொருட்களில் வைத்து சென்றுள்ளார்.

அந்த கடிதத்தில், தேனீ வளர்ப்பில் ஈடுபாடு கொண்ட என் பிள்ளைக்கு இந்த கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

மேலும், தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்றும் கூடுதல் வருமானத்திற்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள ரிக், அன்புடன் அப்பா என கடிதத்தை முடித்துள்ளார். ஏமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.