Friday, January 24, 2025

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேரன் சமி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செயின்ட் வின்சென்ட்டில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார் எனவும் தெரிவித்தார்.

40 வயதான டேரன் சமி, கடந்த 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒயிட் பால் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக 2014 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news