அலுமினியம் ஃபாயிலால் பார்சல் செய்யப்படும் உணவுகளில் ஆபத்து! ஆய்வில் கிடைத்த தகவல்..

197
Advertisement

அலுமினியம் ஃபாயில் (Aluminium Foil) என்ற பொருளை பல விதமாகப் பயன்படுத்தலாம்,

அது சமையலறையில் மட்டுமல்ல அதையும் தாண்டி பல பயன்பாடுகளை கொண்டுள்ளது, சமைத்த இறைச்சிகள் மற்றும் பாஸ்ட் ஃபுட் உணவுகளை பார்சல் செய்வதற்கும், சில பேக்கரி கேக்குகளை போக் செய்வதற்கும் உதவுகிறது.
பல நேரங்களில் Aluminium Foil நமக்கு கைகொடுத்தாலும் சில நேரங்களில் இதன் சில பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் , Centre For Disease Control And Prevention-ன் கூற்றுப்படி Aluminium Foil பயன்படுத்தி சமைந்த மற்றும் பார்சல் செய்யப்பட்ட உணவுகள் Aluminium Foil-லில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சும்,

அந்த உணவுகளை சாப்பிடுவதால் ரசாயனங்கள் Blood stream மூலம் நம் உடலுக்குள் நுழைகிறது, ஆனால் இவை முறையே மலம் மற்றும் சிறுநீர் வழியே விரைவாக வெளியேறுகிறது. இருப்பினும் ஜர்னல் ஆஃப் எலக்ட்ரோ கெமிக்கல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் Aluminium Foil-ல் சமைக்கப்படும் உணவுகள், ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்கள், எனவே Aluminium Foil -லை வைத்து சமைக்கப்பட்ட அல்லது சூடாக பார்சல் செய்யப்பட்ட உணவுகளும், மேலும் பேக் செய்யப்படும் பிளம் கேக், வால் நட் கேக் ஆகியவற்றை சாப்பிடால் நல்லது இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.