ரஷ்யா, உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும் நிலையில்,
உக்ரைன் அதிபரின் நடன வீடியோ ஒன்று சமூக வலைத்
தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி
அரசியலுக்கு வருவதற்குமுன்பு அந்நாட்டின் பிரபலமான
ஒன் பிளஸ் ஒன் என்னும் சேனலில் ரியாலிட்டி ஷோக்கள்
நடத்திவந்தார். அப்போது தொலைக்காட்சி நாடகங்களிலும்
நடித்துவந்தார்.
அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வன்ட் ஆஃப் தி
பீப்புள் என்ற தொடர் மிகவும் பிரபலமடைந்தது. அதில், பள்ளிக்
கூட ஆசிரியராக காமெடியாக நடித்துள்ள அவர் உக்ரைனில்
நிலவிய ஊழலைப் பற்றி ஆவேசமாகப் பேசிய காட்சிகளும்
இடம்பெற்றிருந்தது.
நான்கு ஆண்டுகள் பரபரப்பாக ஓடிய இந்தத் தொடரில்,
தொடர் முடியவிருந்த நேரத்தில், தொடரின் பெயரிலேயே
அதாவது, சர்வன்ட் ஆஃப் தி பீப்புள் என்னும் பெயரிலேயே
கட்சியைத் தொடங்கி 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும்
குதித்து ஆட்சியைப் பிடித்துவிட்டார்.
நகைச்சுவை நடிகர், நடனக் கலைஞர், வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்
என்று பல திறமைகொண்டுள்ள 44 வயதான ஜெலன்ஸ்கி
அரசியலுக்கு வருவதற்கு முன்பு மேடைக் காமெடியனாக
நடித்து பொதுமக்களை மகிழ்வித்து வந்தார். ஜோடி நம்பர் 1
என்ற நிகழ்ச்சியில் நடனமாடினார்.
அந்தக் காட்சி தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.