செங்கல்பட்டு நகராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் செங்கல்பட்டு மாவட்டம் இன்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்நிலையில் தாய் சேய் நல பிரிவு, நெஞ்சக நோய் பிரிவு, சிறுநீரகவியல் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் சாலை வழியாக செல்லும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களும் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் நீர் தேங்கி காட்சியளிப்பதால் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இதனால் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சாலையை சீரமைத்து தரவேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
