8 ஆண்டுகள் சேமிப்பில் தன் கனவு வாகனத்தை வாங்கிய தினக்கூலி தொழிலாளி !

278
Advertisement

அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், எட்டு ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்து  இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

கவுகாத்தியின் , போராகான் பகுதியைச் சேர்ந்த உபென் ராய் என்பவர் தினக்கூலி தொழிலாளியாக உள்ளார்.  இரு சக்கர வாகனம் வாங்க  வேண்டும் என்ற கனவில் 2014-ம் ஆண்டு முதல் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மதிப்புள்ள நாணயங்களை சேமித்து வந்தார்.

இந்நிலையில் , அவற்றின் கனவு இருசக்கர வானத்தை வாங்கும் அளவிற்கு சேமிப்பு வந்த உடன் , அவர் சேமித்த பணத்தை அதாவது  அனைத்தும் நாணயங்களாகவே உள்ளது , நாணயங்களை  சாக்குப்பையில் எடுத்து  சென்று அருகில் ஷோ ரூமில் தன் கனவு வாகனத்தை வாங்கி உள்ளார்.

தன்னம்பிக்கையுடன் இலக்கை அடையவேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக சேமித்து கனவை நிறைவேற்றியுள்ளார். இவரின் செயல் பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது. அவர் சேமித்த  மொத்த நாணயங்களின் மதிப்பு  ரூ. 1.5 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.