தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ‘டிட்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக நாளை (நவம்பர் 29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
