Wednesday, August 13, 2025
HTML tutorial

பணத்தை பறிக்க போலியான லிங்க்.., எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:- வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது.

அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.

இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News