அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர்களான துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையில், சட்டவிரோதமாக பூட்டான் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை வரி ஏய்ப்பு செய்து துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
