Wednesday, December 17, 2025

ஐபோன் 17-ஐ வாங்குவதற்காக வரிசை கட்டி நின்ற வாடிக்கையாளர்கள்

ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸின் இந்திய விற்பனை இன்று தொடங்கியது. ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் BKC-ல் உள்ள ஆப்பிள் ஷோரூம்மில் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். ஆரஞ்சு நிற ஐபோன் 17 ப்ரொவின், கேமரா மற்றும் பேட்டரியில் மாற்றங்கள் உள்ளன என்றும் தோற்றமும் வித்தியாசமாக இருக்கிறது என வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

இதேபோல் தலைநகர் டெல்லியின் சாகேத்தில் உள்ள ஆப்பிள் ஷோரூம் வெளியேயும், ஏராளமான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஐபோன் 17-ஐ வாங்கி சென்றனர். இந்த முறை ஐபோனின் வடிவமைப்பு மாறிவிட்டது என்றும் ஐபோன் 15 Pro Max ஐ ஒப்பிடும்போது, தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 17 மாடலில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

Related News

Latest News