Wednesday, April 16, 2025

அஸ்வினை ‘தூக்கியடித்த’ CSK களமிறங்கும் 31 வயது ‘வீரர்’

அடுத்து வரும் 7 போட்டிகளிலும் வென்றால் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் Play Offக்குள் என்ட்ரி கொடுக்க முடியும். இதில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட, கையில் கால்குலேட்டருடன் காத்துக் கொண்டிருக்கும்படி இருக்கும்.

2 போட்டிகளில் தோற்றால் தொடரில் இருந்தே வெளியேற வேண்டியது தான். இதனால் பிளெயிங் லெவனில் வீரர்களை பார்த்துப்பார்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. இந்தநிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, இனி ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என தெரிகிறது.

மெகா ஏலத்தில் மிகப்பெரும் தொகைக்கு எடுக்கப்பட்ட அஸ்வின், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் லக்னோவிற்கு எதிரான போட்டியில், அவருக்கு பதிலாக அன்ஷூல் கம்போஜ் உள்ளே வந்தார். இந்தநிலையில் அஸ்வினுக்கு மாற்றாக 31 வயது வீரர் ஷ்ரேயாஸ் கோபாலுக்கு, அணியில் இடமளிக்க தோனி முடிவு செய்துள்ளாராம்.

அதாவது வேகத்திற்கு சாதகமான பிட்சில் அன்ஷூலுக்கும், சுழலுக்கு சாதகமான பிட்சில் ஷ்ரேயாஸும் பிளெயிங் லெவனில் இடம் பெறுவார்களாம். CSKவிற்கு இப்போது தேவைப்படுவது வெற்றி மட்டுமே என்பதால், ஷேக் ரஷீத் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

Latest news