வெற்றிகரமாக 6வது தோல்வியை சந்தித்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏப்ரல் 20ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை 176 ரன்களை எடுத்தது. அப்போதே ரசிகர்களுக்கு மேட்சின் முடிவு தெரிந்து போயிருக்கும்.
போட்டியின் ஒரே ஆறுதல் ஒன் டவுனாக இறங்கிய 17 வயது ஆயுஷ் மத்ரே மட்டும் தான். உலகின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக பவுண்டரிகளை பறக்கவிட்டு, பட்டாசு கொளுத்தினார். சென்னைக்கு எதிரான போட்டியால் மும்பைக்கும் ஒரு மிகப்பெரிய நன்மை நடந்துள்ளது.
பார்ம் இல்லாமல் தவித்து வந்த ரோஹித் சென்னை பவுலர்களின் மோசமான பந்துவீச்சால், தன்னுடைய அதிரடியை மீட்டு எடுத்துள்ளார். இதனால் மும்பை Play Off செல்வதை, இனி யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
மும்பையிடம் சென்னை வீழ்ந்ததை விடவும், 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுக்கப்பட்ட dewald brevisஐ, CSK பெஞ்சில் அமரவைத்தது தான், ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில், ”குட்டி AB villiers என அழைக்கப்படும் brevisக்கு ஏன் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கவில்லை.
இதற்கு அவரை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். ஜடேஜா, அஸ்வின், துபே போன்றவர்களை வைத்தே இன்னும் எத்தனை நாளுக்கு படம் காட்டப் போகிறீர்கள்?,” என்று, ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.