Thursday, May 29, 2025

BCCIயின் ‘புதிய’ விதியால் 3 வீரர்களை ‘இழக்கும்’ CSK?

நடப்பு IPL தொடரில் BCCI தன்னுடைய இஷ்டத்துக்கு, புதிய விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் அணிகள் BCCIக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சம்பவங்களும், அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. என்றாலும் BCCI இதற்கெல்லாம் அசராமல், மீண்டும் ஒரு விதியை அமல்படுத்த துடிக்கிறதாம்.

அதாவது நடப்பு தொடரில் வீரர்கள் காயத்தால் போட்டிக்கு நடுவே, மாற்று வீரர்களை அணிகள் எடுத்துக் கொண்டன. இதற்கிடையே போர் பதற்றத்துக்கு பின்னர் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பியதால், அவர்களுக்கு பதிலாக எடுக்கப்படும் வீரர்களை, அடுத்த ஆண்டுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று BCCI அறிவித்தது.

தற்போது இடையில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கும் செக் வைக்கும் விதமாக, புதிய விதியை BCCI கொண்டு வரவுள்ளதாம். இதன்படி ஏலத்தில் வாங்கப்படாமல், தொடருக்கு நடுவே நேரடியாக வாங்கப்படும் வீரர்களை, இனி தக்கவைக்க முடியாதாம். அத்துடன் இனிமேல் வீரர்களை கட்டாயமாக ஏலம் அல்லது, டிரேடிங் வழியாக மட்டுமே வாங்க வேண்டும் என்றும், BCCI அறிவிக்க உள்ளதாம்.

தொடருக்கு நடுவே வீரர்களை வாங்கும்போது, பெரிய தொகை அவர்களுக்குக் கிடைக்கிறது. விளையாடும் நாட்களும் குறைவு.  இதனால் வீரர்கள் IPL ஏலத்தில் பெயரினை பதிவு செய்துவிட்டு, பின்னர் உடல்நலக்குறைவு என்று, ஏலத்தில் பங்கேற்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன.

இது Match Fixingற்கு சமமானது என BCCI நினைக்கிறதாம். இதனால் தான் இந்த புதிய விதியை அமல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை IPL தொடரில் இந்த விதி கொண்டு வரப்பட்டால் சென்னை அணி ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ் ஆகிய மூவரையும் மொத்தமாக இழக்கும்.

சரிந்து கிடந்த பேட்டிங் ஆர்டரை தற்போது தான் ஒருவழியாக, சென்னை மீண்டும் கட்டமைத்தது. தற்போது இந்த விதி அமலுக்கு வந்தால் மினி ஏலத்தில் தான், மேற்கண்ட வீரர்களை வாங்க முடியும். சென்னையுடன் பிற அணிகளும் போட்டி போடும் பட்சத்தில், மூன்று பேரில் ஒருவரையாவது இழக்கும் நிலைக்கு CSK தள்ளப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news