‘வாழ்ந்து கெட்ட ராஜா போல’ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காட்சி அளிக்கிறது. ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியிருப்பதால், சொந்த ரசிகர்களே விரக்தி அடைந்துள்ளனர். 5 கோப்பை வைத்துள்ளோம் என்று பெருமை அடித்தவர்கள் கூட, ‘அட போங்கப்பா’ என்று சோககீதம் வாசிக்கின்றனர்.
இந்தநிலையில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தங்களுடைய தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பிரஸ் மீட்டில் ருதுராஜ், ” கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.
பவர்பிளேவில் விக்கெட்களை வேகமாக இழந்து விடுகிறோம். நான், ரச்சின், கான்வே விரைவாக ஆட்டமிழந்து வெளியேறியதே இதற்கு முக்கிய காரணம். பவுலிங்கிலும் பிரச்சினை உள்ளது. கூடுதலாக 20 ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்,” என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.
IPL முதல் பாதியில் 4 ஆட்டங்கள் சென்னை அணிக்கு சாதகமாக, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது. ஆனால் சொந்த கிரவுண்டிலேயே தோல்வியைத் தழுவி, ரசிகர்களுக்கு CSK அதிர்ச்சியை பரிசளித்துள்ளது.