Thursday, December 26, 2024

உலகில் முதல் முறை நீண்டதூர  “ஏர் ஆம்புலன்ஸ்” பயணம்-சென்னையில் உயிர்பிழைத்த பெண்

அவசர சிகிச்சைக்காக  ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை இடமாற்றம் செய்வதை பார்த்துருக்கிறோம்.சில நேரங்களில் நீண்ட துராத்தை ,விரைவாக ஆம்புலன்ஸ் மூலம், சாலைகளில் தடங்கல் ஏற்படாமல் சில முன் ஏற்பாடுகள் செய்து அவரச சிகிச்சைக்காக அழைத்துச்செல்வது இன்றைய நாட்களில் அடிக்கடி நடக்கிறது.

இருப்பினும் இது ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே சாத்தியம்,இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து  சென்னைக்கு “ஏர் ஆம்புலன்ஸ்” மூலம் பெண் ஒருவர் அவசர அறுவைசிகிச்சைக்காக , 26 மணிநேரத்தில் அழைத்துவரப்பட்டுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த  67-வயது பெண் தனது மகன்களோடு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,சில தினங்களுக்கு முன் இவருக்கு உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்யவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, சென்னையில் அப்பெண்ணிற்கு  சிகிச்சை அளிக்க முடிவெடுத்தனர்.

இதனையடுத்து, ICU வசதியுடன் கூடிய ICATT எனப்படும் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை மூலம் அவர் சென்னை அழைத்துவரப்பட்டார். குறிப்பாக சிகிச்சைக்காக உலகிலேயே முதன்முறையாக சுமார் 26 மணி நேரம் பயணம் செய்த ஏர் ஆம்புலன்ஸ் பயணம் இது என கூறப்படுகிறது.மேலும், இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 1 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest news