Wednesday, December 4, 2024

அந்த Goal அவர் போடல… ரொனால்டோவுக்கு ஆப்பு வைத்த Adidas!

FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், உருகுவேக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணியை சேர்ந்த ரொனால்டோ goal போட்டாரா இல்லையா என்பதே பெரிய பஞ்சாயத்தாக மாறியுள்ளது.

அதி நவீன தொழில்நுட்பத்தினால் உறுதி செய்யப்படவில்லை என்றால் இன்னுமே அந்த குழப்ப நிலை நீடித்திருக்க வாய்ப்புள்ளது. ரொனால்டோ உட்பட அனைவருமே அவர் தான் goal போட்டதாக நினைத்த போது, இறுதியில் Brunoவிற்கு அந்த goal வழங்கப்பட்டதற்கு, Adidas பந்துகளில் உள்ள ‘Cutting Edge Technology’ தான் காரணம்.

பந்திற்குள் பொறுத்தப்பட்டுள்ள Inertial Measurement Unit என்ற சென்சார் பந்தின் மீது படும் சிறிய அழுத்தத்தை கூட துல்லியமாக கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பிவிடும். இந்த தரவுகளின் அடிப்படையில், பந்து ரொனால்டோவின் தலையில் உரசி சென்றாலும், முன்னதாக பந்தை cross செய்த brunoவுக்கே goal வழங்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ goal போட வேண்டும் என்று தான் நான் பந்தை cross செய்தேன் என்றும் எப்படி இருந்தாலும் அடுத்த சுற்றுக்கு எங்கள் அணி சென்றுள்ளது, அது தான் முக்கியம் என Bruno Fernanandes கருத்து தெரிவித்துள்ளார். இந்த Goal நிர்ணயிக்கப்பட்ட விதத்தை பற்றி கால்பந்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!