தையல் இயந்திரங்களை குறிவைத்து திருடும் திருடன்

theft
Advertisement

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அவினாசிபாளையம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களின் பூட்டை உடைத்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து,திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில் கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பல்லடம் செட்டிப்பாளையம் சாலை மற்றும் கோவை வழித்தடங்களில் தனிப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

Advertisement

காரை ஓட்டி வந்தவர் போலீசாரிடம் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த நபர், பனியன் நிறுவனங்களை நோட்மிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து தையல் இயந்திரங்களை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17 தையல் இயந்திரங்களையும், கடத்தலுக்கு பய்னபடுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், தையல் இயந்திர கொள்ளையனை நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.