Tuesday, April 22, 2025

“அதிமுக ஆட்சியை விட தற்போது குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மட்டுமே 4 கொலைகள் நடந்திருப்பதாகவும், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதில் அளிக்கத் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், தைரியம் இருந்தால், தான் சொல்வதை கேட்டுவிட்டுச் செல்ல வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் : காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர், எந்தக் கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு 49 ஆயிரத்து 280 ஆக இருந்த கொலை, கொலை முயற்சி உட்பட குற்றங்கள், 2024 ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 498 ஆகக் குறைந்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Latest news