அறுவைச் சிகிச்சையின்போது அறுவைச் சிகிச்சை
அரங்குக்குள் செல்லும் மருத்துவர்கள், மருத்துவப்
பணியாளர்கள் மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்து
வந்த நாம் இன்று சர்வசாதாரணமாக முகக் கவசம்
அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முகக் கவசம் என்கிற வார்த்தையே அந்நியமாக
இருந்த காலம் மலையேறி, பேஷன் பேஷனாக
டிசைன் டிசைனா மாஸ்க் அணிகிறோம் எனச்
சொல்லுமளவுக்கு கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது.
ஆனால், மாடுகளுக்கும் முகக் கவசம் அணிவிப்பர்
என்பது விவசாயம் சார்புடையோரைத் தவிர,
மற்றவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு.
முன்பெல்லாம் புனையல் அடிக்கும்போது மாட்டின்
வாயில் காற்றோட்டமுள்ள கவசம் ஒன்றை மாட்டி
விடுவார்கள்.
நெல் அல்லது மற்ற பயிர்களைப் புனையலடிக்கும்
அவற்றைத் தீவனமாக நினைத்து உண்டுவிடக்கூடாது
என்பதற்காக இவ்விதம் செய்வார்கள். அப்படி மேயத்
தொடங்கினால் மாடுகளின் கவனம் முழுவதும்
உண்பதிலேயேதான் இருக்கும். இதனைத் தவிர்ப்பதற்
காகவே இவ்விதம் மாடுகளுக்கு முகக் கவசம் அணிந்து
விடுவர்.
தற்போது மனிதர்கள் முகக் கவசம் அணிவதைக்
கிராப்புறவாசிகள் இவ்வாறு கிண்டலடித்து வருகின்றனர்.