Wednesday, May 14, 2025

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, நமது சகோதரிகளின் குங்குமத்தை அளித்தவர்களை அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் குன்வார் விஜய் ஷா கூறியிருந்தார்.

கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது கருத்துக்கு அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது 4 மணி நேரங்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news