சுனந்தா புஷ்கர் மரண வழக்கு – காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விடுவிப்பு

order
Advertisement

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து அவரது கணவரும், காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சசிதரூர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், சசிதரூரை விடுவித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.