Saturday, March 15, 2025

கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீன்வளத்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபிக் மீனவர்களை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

Latest news