இந்தியாவில் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் பரவலாக பயன்பாட்டில் இருந்தபோது, இணைய சேவைகள் மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைத்தது. ஆனால், 4G நெட்வொர்க்கின் ஆரம்பத்துடன், இணைய சேவையின் கட்டணங்கள் திடுக்கிடும் அளவில் உயர்ந்தன. மேலும் 6G நெட்வொர்க்கும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தொழில்நுட்பத் துறைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உலகளவில் இணைய சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1 MB க்கு அதிகபட்சமாக ரூ.382.75 வசூலிக்கப்படுகிறது.
உலகின் அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் கானா இரண்டாவது இடத்தில் உள்ளது, அங்கு 1 MB க்கு ரூ.229.12 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து 3வது இடத்தில், இதில் 1 MB க்கு ரூ.183.83 வசூலிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் கென்யா 4வது இடத்தில், மொராகோ 5வது இடத்தில், ஆஸ்திரேலியா 6வது இடத்தில், ஜெர்மனி 7வது இடத்தில், நைஜீரியா 8வது இடத்தில், கனடா 9வது இடத்தில் மற்றும் பாகிஸ்தான் 10வது இடத்தில் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 41 வது இடத்தில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் இனிய சேவைக்கான கட்டணங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.