சா்ச்சைக்குள்ளான இருமல் மருந்துகள் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்தது. இதுகுறித்த விளக்கம் கிடைத்த பிறகு, அந்த இருமல் மருந்தை தடை செய்ய ‘உலகளாவிய மருத்துவ பொருள்கள் எச்சரிக்கை’ அழைப்பை உலக சுகாதார அமைப்பு விடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாக கருதப்படும் இருமல் மருந்துகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்துகளை முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, அவற்றின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உற்பத்தி மையங்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.