கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
2022 க்கு பிறகு கிட்டதட்ட முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில், சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.