லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது ரஜினியின் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை USAவில் ரஜினியின் கூலி படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 1.8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.