ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்க்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டுமே ரூ.9.8 கோடி வசூல் செய்துள்ளது.