Wednesday, February 18, 2026

கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதே நேரத்தில் இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 65 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் கூலி படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் வரும் செம்டம்பர் 11ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது.

Related News

Latest News