Tuesday, April 1, 2025

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இது ரஜினியின் 171 வது திரைப்படமாகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

Latest news