Friday, September 12, 2025

உலகளவில் ‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கூலி திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News