எந்த எண்ணெய் தான் நல்ல எண்ணெய்?

115
Advertisement

வசீகரிக்கும் விதவிதமான விளம்பரங்கள் வழியே தினமும் பலவகையான எண்ணெய்கள் சந்தைக்கு வரும் நிலையில், உடல்நலனுக்கு ஏற்ற எண்ணெய் எது என்று பலரும் குழம்பித் தான் போகின்றனர்.

ஒவ்வொரு எண்ணையும் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்த கூடும் என்பதால், தகுந்த ஆய்வுக்கு பின்னரே எண்ணெய்களை உபயோகிக்க வேண்டும். சூரிய காந்தி எண்ணெயில் விட்டமின் E சத்து அதிகமாக உள்ளது.

ஆனால், அதிகமாக சூடாகும் போது இந்த எண்ணெய் சத்து தன்மையை இழந்து விடுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் நிறைந்த சோயா எண்ணெய், உடலில் சேரும் கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது.

Advertisement

விட்டமின் B Complex மற்றும் இதய நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆலிவ் எண்ணெயில் இருந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணையை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

கொழுப்பு சேர்வதை தடுக்கும் கனோலா எண்ணெய், கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க உதவுகிறது. Fiber, பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் E  மற்றும் விட்டமின் K உள்ள அவோகேடோ எண்ணெய் இதய நோய்களில் இருந்தும் பாதுக்கப்பதாக உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.