பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையடுத்து அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.