நடிகர் ரோபோ சங்கர், நேற்று நடந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தின் விழாவில் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, அறிமுக நடிகை ஷாலினி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு, ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராஜாகதை வசனம் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், இது உண்மையில் என் ஜாதிக்காரன் படம் என பேசியுள்ளார். “நகைச்சுவை நடிகர்கள் இணைந்து ஒரு படம் செய்தால் அது வெற்றிபெறும்,” என்று சொல்ல வந்ததை, “சாதிக்காரன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, நகைச்சுவையாக அவர் பேசியிருக்கிறார். ரோபோ சங்கரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.