டிசம்பர் மாதத்திற்கான தமிழக பள்ளிகளின் விடுமுறை மற்றும் தேர்வு அட்டவணை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
அரையாண்டு தேர்வு
மழை இல்லாத பகுதிகளில் டிசம்பர் 9-ம் தேதி வரை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். மேலும் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை
அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 23-ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. அதனை தொடர்ந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை ஜனவரி 4-ம் தேதி வரை நீடிக்கும். மீண்டும் ஜனவரி 5-ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் இந்த விடுமுறை நாட்களிலேயே வருவதால், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடவும், வெளியூர் சுற்றுலா செல்லவும் இது வசதியாக இருக்கும். மொத்தத்தில், டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் வெறும் 17 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
