Thursday, August 21, 2025
HTML tutorial

மாநாட்டுக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாநாட்டிற்கு வந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் 33, என்பவர் தவெக மாநாட்டிற்கு சக தொண்டர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சக்கிமங்கலம் பகுதிகளில் வைத்து இயற்கை உபாதைக்காக கீழே இறங்கியபோது
மயங்கி விழுந்துள்ளார்

மயங்கி விழுந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News