தமிழ்நாட்டில், சமூக நீதி கணக்கெடுப்பு என்ற பெயரிலாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா சாலை, ஆல்டா சந்திப்பில் உள்ள ராமசாமி படையாட்சியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவருடைய திருவுருவப்படத்திற்கு அன்புமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமசாமி படையாட்சி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார் என்று குறிப்பிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரை சமூக நீதி கணக்கெடுப்பு என மாற்றியாவது கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார். வன்னியர்களுக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
